Sunday, May 27, 2012

ஏலக்காயின் மருத்துவ குணம் பற்றிய தகவல் !!!

பல‌ர் சூ‌யி‌ங்க‌ம் சா‌ப்‌பிடுவா‌ர்க‌ள். இதனா‌ல் எ‌ந்த பலனு‌ம் இ‌ல்லை. ஆனா‌ல் அத‌ற்கு ப‌திலாக ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று சா‌ப்‌பிடலா‌ம்.

ப‌சியே ஏ‌ற்படுவ‌தி‌ல்லை, சா‌ப்‌பிட ‌‌பிடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று கூறுபவ‌ர்க‌ள், ‌தினமு‌ம் ஒரு ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்றா‌ல், ப‌சி எடு‌க்கு‌ம். ‌ஜீரண உறு‌ப்பு‌க‌ள் ‌சீராக இய‌ங்கு‌ம்.

நெ‌ஞ்‌சி‌ல் ச‌ளி க‌ட்டி‌க் கொ‌ண்டு மூ‌ச்சு ‌விட ‌சிரம‌ப்படுபவ‌ர்களு‌ம், ச‌ளியா‌ல் இரும‌ல் வ‌ந்து, அடி‌க்கடி இரு‌மி வ‌யி‌ற்றுவ‌லி வ‌ந்தவ‌ர்களு‌க்கு‌ம் கூட ஏல‌க்கா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமையு‌ம். ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌‌ட்டாலே, கு‌த்‌திரு‌ம்ப‌ல், தொட‌ர் இரு‌ம‌ல் குறையு‌ம்.

வா‌‌ய் து‌ர்நா‌ற்ற‌ம் ஏ‌‌ற்படுவத‌ற்கு‌ம் ‌ஜீரண உ‌று‌ப்புக‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பி‌ர‌ச்‌சினை தா‌ன் காரண‌ம். எனவே வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தை‌ப் போ‌க்க ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌ட்டு வரலா‌ம்.

சா‌ப்‌பிடு‌ம் உணவு வகைக‌ளி‌ல் ‌சி‌றிது ஏல‌க்காயை சே‌ர்‌த்து‌க் கொ‌ள்வது ந‌ல்லது. அ‌திகமாக சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள‌க் கூடாது.

ஏலக்காயை பொடியாக்கி தேனில் கலந்து சாபபிட்டால் நரம்பின் பலம் கூடும், கண் பார்வை அதிகரிக்கும். ஏலக்காயை பொடியாக்கி துளசிச் சாற்றுடன் கலந்து உட்கொண்டால் வாந்தி நிற்கும். ஏலக்காய் 4, ஒரு துண்டு சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து நீர் விட்டு கொதிக்க வைத்து பருகினால் வறட்டு இருமல் தொண்டை வலி தீரும். 4 ஏலக்காய், ஒரு கைப்பிடி நாவல் இலை சேர்த்து அரைத்து ஆட்டுப்பாலில் கலந்து சாப்பிட்டால் செரியாமை, சீதக்காதி தீரும். ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு ஆகியவை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்து போல் போட்டால் தலைவலி, சளி விளகும்.

வாசனைப் பொருட்களின் அரசி என்று வர்ணிக்கப்படுவது ஏலக்காய். சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் ஏலக்காய் அசைவ உணவுகளுக்கு கூடுதல் சுவை சேர்க்கக்கூடியது.

ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன. அவை…

* குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்று விடும்.

* ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும்.

* மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், `ஏலக்காய் டீ’ குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சட்டென்று குறைகிறது.

* நா வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும். அதேநேரம், ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது நல்லதல்ல.

* வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். மயக்கமும் மாயமாய் மறைந்துவிடும்.

* விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி வடிகட்டி, மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தாலே போதும்.

* வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்

--
YOURS VAAZHGA VALAMUDAN
B. SRINIVASAN.M.A.,M.Ed.,M.C.A.,M.A(YOGA)
KRISHNAGIRI - 635 001
CELL : 99943-94610
srinivasanb2401@blogspot.com

Monday, May 14, 2012

தொப்பை குறைக்க உதவும் அன்னாசிப்பழம் பற்றிய தகவல் !!!

தொப்பை குறைக்க உதவும் அன்னாசிப்பழம் பற்றிய தகவல் !!! எல்லோரும் விரும்பி உண்ணக் கூடிய பழம் அன்னாசிப்பழம் . பிரேசில் நாட்டின் தென்பகுதி, பராகுவே ஆகிய இடங்களைத் தாயகமாகக் கொண்டது. இப்போது எல்லா நாடுகளிலும் உற்பத்தி ஆகிறது . அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் இரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது . எல்லா பழங்களிலுமே இயற்கையாகவே அதிக சக்தியளிக்கும் தன்மை உண்டு. 100 கிராம் அன்னாசி பழத்தில் 88 சதவீதம் ஈரப்பதம் 0.6 சதவீதம் புரதம், 10.8 சதவீதம் மாவுச்சத்து, 17 சதவீதம் கொழுப்புச்சத்து, 63 மில்லிகிராம் விட்டமின் மற்றும் கால்சியம் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின் ஆகிய தாது உப்புகளும் அடங்கியுள்ளது. அன்னாசிப் பழத்தில் உள்ள புரோமெலினிக்கு செரிமான சக்தி உண்டு நல்ல குரல் வளம் பெறவும், தொண்டைப்புண், தொண்டைக்குள் வளரும் சதை குணமடையவும், அன்னாசிப் பழச்சாறு மிகவும் பயனுடையதாகும். இச்சாற்றால் நன்கு வாயை கொப்பளித்தால் தொண்டை அழற்சி நோயில் இருந்து விடுபடலாம்.இரத்தசோகை ,மஞ்சள்காமாலை, வயிற்றுவலி, இதய வலி ஆகிய நோய்களையும் குணப்படுத்தும் தன்மையும் இப்பழத்திற்கு இருக்கின்றது என்றால் பாருங்களேன் இதன் சக்தியை . அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது.அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம்,அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை இருக்காது .இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு..... தேகத்தில் போதுமான இரத்தம் இல்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த மருந்து . நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர அதன் பயன்களை நீங்களே அறிவீர்கள் . அன்னாசிப் பழத்தில் ஜாம் , ஜூஸ், வற்றல் என்பன தயாரிக்கப்படுகிறது . அன்னாசி பாயாசம் ரொம்பவும் ருசியாக இருக்கும் . அன்னாசி பழம் சப்பிடாதோர் ஒருமுறை சாப்பிட்டு தான் பாருங்களேன் . By: இன்று ஒரு தகவல்

Wednesday, May 9, 2012

கீரை

பொன்னாங்கன்னி கீரை !! வைட்டமின் சி மற்றும் இரும்புச் சத்து ஓரளவு உள்ளது. கால்சியம், நார்ச்சத்து, பீட்டா கரோட்டின் மற்றும் ரிபோ ப்ளோமின் நிறைந்துள்ளன. மெக்னீஷியம், தாமிரம், மாங்கனீஸ், கந்தகம் ஆகியவை ஓரளவுக்கு உள்ளன. கண்களுக்கு மிகவும் நல்லது. புரதம் ஓரளவுக்கு உள்ளது. வாரம் ஒரு முறை கூட்டு செய்து சாப்பிடலாம்.... வெந்தயக்கீரை !! உடலுக்கு குளிர்ச்சித் தரக்கூடியது வெந்தயக் கீரை. வெந்தயக்கீரையானது வெந்தயத்திற்கான அனைத்து நற்குணங்களையும் தன்னகத்தே கொண்டது. சிறுநீர்ப் பெருக்கியாகவும், மலமிளக்கியாகவும் மூப்படைந்த தசைகளை இறுக்கி இளமையை காத்திடக்கூடிய ஓர் உன்னத மூலிகையாகத் திகழ்கிறது. மேலும் வெந்தயக்கீரை வயிற்றுப்பொருமலை தவிர்க்கக் கூடியது. ஜூரத்தை குறைக்கக் கூடியது. இருமல், சளி போன்ற கப கோளாறுகளை சீராக்கக் கூடிய... நோய் எதிர்ப்பு சக்தி தரும் முருங்கைக் கீரை !! முருங்கைக் கீரையில் கால்ஷியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி, பீட்டா கரோட்டின் ஆகியவை நிறைந்துள்ளன. கண்ணுக்கு மிகவும் நல்லது. மலச் சிக்கலைத் தீர்க்கும். பொட்டாஷியம், தாமிரம், மெக்னீஷியம், குரோமியம், துத்தநாகம், குளோரைடு ஆகிய தாது உப்புகள் இந்த கீரையில் ஓரளவுக்கு இருப்பதால் உடலுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும். எலும்பு உறுதி பெறும். முருங்கைக் கீரையில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதனால், அதை உணவாக உட்கொள்ளும்போது, சொறி சிரங்கு நோய்கள், பித்தமயக்கம், கண்நோய், செரியா மாந்தம், கபம் முதலியவை குணமாகின்றன... வைட்டமின் ஏ மிகுந்திருப்பதால் கண்ணுக்கு ஒளியூட்டக்கூடியது முருங்கைக்கீரை...

மாரடைப்புக்கு அருமருந்து இஞ்சி!

மாரடைப்புக்கு அருமருந்து இஞ்சி! மாரடைப்புக்கு அருமருந்து இஞ்சி!மாரடைப்பைத் தடுக்கும் சக்தி இஞ்சிக்கு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.இதயத்துக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது. கொழுப்புச்சத்து உள்ள உணவை சாப்பிடும் பொழுது ஐந்து கிராம் அளவுக்கு இஞ்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு சத்து நிறைந்துள்ள உணவை அடிக்கடி சாப்பிடுவது இரத்த நாள இயக்கத்தை நாளடைவில் வலுவிழக்கச் செய்துவிடும். இரத்தநாளங்களில் இரத்தக்கட்டு ஏதேனும் ஏற்படுமாயின் அதை சரிசெய்வது அவ்வளவு எளிதன்று. இதற்குக் கைகண்ட மருந்தாக இஞ்சி விளங்குகின்றது. இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி மாரடைப்பு நேராமல் இஞ்சி தடுக்கின்றது.” என்று இந்திய மருத்துவக் கழக இதழில் டாக்டர் SK வர்மா தெரிவித்துள்ளார். ஆரோக்கியமான 30 நபர்களிடம் இஞ்சியின் மருத்துவகுணத்தைக் குறித்து அறிய சோதனை நடத்தப்பட்டது. முதல் வாரத்தில் 50 கிராம் வெண்ணையும், 4 ரொட்டித்துண்டுகளும் அவர்களுக்குக் கொடுக்கபட்டன. அடுத்த வாரம் அதனுடன் ஐந்து கிராம் இஞ்சி சேர்த்து கொடுக்கப்பட்டது. அதற்கு அடுத்த வாரம் அவர்களின் இரத்தம் சோதிக்கப்பட்டது. அவர்களின் இரத்த நாளத்தின் முதல் வார இயக்கம் 18.8 சதவிகிதம் குறைந்து இருந்தது. ஆனால் அதற்கு அடுத்த வாரம் 6.7 சதவிகிதம் அதிகரித்து இருந்தது. இதன் மூலம் இரத்தநாளங்களின் செயல்பாட்டிற்கும், இரத்த ஓட்டத்திற்கும் இஞ்சியின் பயன்பாடு தெளிவாக நிரூபிக்கப்பட்டது. மாரடைப்பு ஏற்படுவதற்கு, இரத்தநாளங்களில் ஏற்படும் அடைப்பும், அவற்றில் ஏற்படும் இரத்தக் கட்டும் மிக முக்கிய காரணம் ஆகும். கொழுப்புச் சத்து அதிகமாக உள்ள உணவுகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம். இதற்கு இரத்தநாளங்களின் சுவர்களில் கொழுப்பு படிந்து இரத்த நாளங்களை வலுவிழக்கச் செய்வதும், இரத்த ஓட்டத்தின் வேகத்தை அது பாதிப்பதும் காரணமாகும். மேற்கண்ட ஆய்வின் மூலம் இரத்தநாளங்களின் வலுவிற்கும், சரியான இரத்த ஓட்டத்திற்கும் இஞ்சி வெகுவாக உதவுகிறது என்பது நிரூபணமாகியுள்ளது. இந்த இஞ்சியின் பலன்கள் இதோடு நின்றுவிடவில்லை. மேலும் பல நோய்களுக்கு அருமருந்தாக இது உள்ளது. - சளிப்பிடித்தல் / ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது. - இரத்தஓட்டம் சீராக இருக்க உதவுகிறது; கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது; மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டி - இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது. - மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. - செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது. - மகளிரின் கருப்பைவலிக்கும் மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது. - தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும். - மூட்டுவலிக்கும் இது நன்மருந்தாக இருப்பதால் ஆஸ்பிரின் ஒவ்வாதவர்களுக்கு இது நல்லதொரு அருட்கொடையாகும். எனவே ஒவ்வொரு நாள் உணவிலும் இஞ்சியை சேர்த்துக்கொள்வது உடலுக்கு பாதுகாப்பானது என மருத்துவ ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.

தோப்புக்கரணம்

நமது முன்னோர்கள் பிடித்த ""தோப்புக்கரணம்"" சர்வதேச்ப் புகழ் பெற்ற அமெரிக்காவின் "யேல்" மருத்துவப் பல்கலைக் கழகம் சொல்கிறது... தோப்புக்கரணத்தின் நன்மைகள் பற்றி ஆய்வு செய்த இந்தப் பல்கலை., டாக்டர்கள் குழு, 'தினமும் காலையில் 20 முறை தோப்புக்கரணம் போட்டால் போதும். காது மடல்களைப் பிடித்து நெற்றியில் குட்டிக் கொள்ளும்போது, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கலாம். அதோடு, மூளை ரத்தஓட்டம் சீராகி ஞாபக சக்தியும் அதிகரிக்கும்; உடல்நலனும் மேம்படும்' என்று அறிவித்துள்ளது. இதோடு, இதற்கு 'சூப்பர் பிரைன் யோகா' என்று ஒரு புதுப் பெயர் சூட்டி, மருத்துவப் பாடத்திட்டத்திலும் இணைத்துள்ளனர். தோப்புக்கரணம் போடுவதால், மூளை சுறுசுறுப்படையும், மறதி நோயை விரட்டியடிக்கும் என்று இப்போது விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த மூளைக்கும் காதுகளுக்கும் ஒருவகையில் நேரடி தொடர்பு உள்ளது. இதை சீனப்பாரம்பரிய மருத்துவர்களும், இந்திய முனிவர்களும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அறிந்திருந்தனர். அதனால், சீன மருத்துவர்கள் காதுப்பகுதியில் அக்குபஞ்சர் முறைகளைப் புகுத்தினர். முனிவர்களும் கடவுள் முன் தோப்புக்கரணம் போடுவதைக் கையாண்டனர். நவீன மருத்துவ உலகில், பிரான்சைச் சேர்ந்த ‘பால்நோஜியா’ என்ற நரம்பியல் நிபுணர் 1950 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில், இதுபற்றி ஆராய்ந்தார். காதுகளுக்கும், மொத்த உடல் உறுப்புகளுக்கும் தொடர்பு இருப்பதை அவர் அறிந்தார். இந்தத் தொடர்பு கருவிலேயே உருவாகிறது என்றும் கண்டறிந்தார். காது மடல்களைப் பிடித்துவிடுவதால் அதன் நரம்புகள் வழியாக மின்தூண்டல் ஏற்பட்டு, மூளையை சுறுசுறுப்படையச் செய்வதாக ‘யேல்’ பல்கலைக்கழகப் பேராசிரியர் ‘யூஜிங் ஆங்’ என்பவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மறதியைத் தவிர்த்து, ஞாபகசக்தி பெருகும் என்றும், ‘அல்சைமீர்’ என்ற மறதி நோயைக் குணமாக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ‘எரிக் ராபின்சன்’ என்ற மருத்துவர் கூறுகையில் , ‘ஞாபக மறதி நோயைக் குணப்படுத்தும் மருந்து இல்லா வைத்தியம்தான் தோப்புக்கரணம்’ என்று தெரிவித்துள்ளார். ஒருவர் தினமும் தோப்புக்கரணம் போடுவதால், கீழ்க்கண்ட நன்மைகள் கிடைக்கின்றனவாம். * மூளையின் செயல்பாட்டை எந்தப் பாதிப்பும் இல்லாமல் வேகப்படுத்துகின்றது. * வேலையில் அதிக கவனம் செலுத்த முடியும். * ஒரு நாளில் அதிக பணிகளைச் செய்ய முடியும். * மூளைக்கு அதிக சக்தியைக் கொடுக்கின்றது * பதற்றம் ஏற்படுவதும் தவிர்க்கப்படுகின்றது. * எல்லாவற்றிற்கும் மேலாக குழந்தைகளின் கல்வித்திறனை அதிகப்படுத்துகின்றது. இடது காதைப் பிடிக்கும் போது வலது பக்க மூளை தூண்டப்படுகின்றது. வலது காதைப் பிடிக்கும் போது இடதுபக்க மூளை தூண்டப்படுகின்றது. அதைமுறைப்படி செய்தால் நல்லது. வலது காதை இடது கையால் பிடிக்க வேண்டும். இடது காதை வலது கையால் பிடிக்க வேண்டும். காது மடலின் கீழ்ப்பகுதியை (கம்மல் போடும் பகுதியை) பிடித்து அழுத்தியபடி கையின் பெருவிரலை முன்பகுதியிலும், ஆட்காட்டி விரலை பின்பகுதியிலும் வைத்துப் பிடிக்க வேண்டும். ஒரே நேரத்தில் இரு காதுகளையும் பிடிக்கும் போது இடதுகை உள்ளேயும், வலது கை வெளியேயும் இருக்க வேண்டும்.